மாயமான மலேசிய விமானத்தில் சென்ற ஆஸ்திரேலிய பயணிகளுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட உள்ளது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட மலேசிய விமானம், கடந்த மார்ச் 8ம் தேதி வியட்நாம் வான்வெளியில் மர்மமான முறையில் மாயமானது. விமானத்தில் சென்ற பல நாட்டு பயணிகள் 239 பேர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. பல நாட்டு கப்பல்கள், போர் விமானங்களில் இந்திய பெருங்கடலில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மலேசிய விமானத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 6 பயணிகள் சென்றுள்ளனர். அவர்களில் ரோட் மற்றும் மேரி பரோஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இரண்டு மாதங்களாகும் நிலையில் பயணிகள் பற்றி எந்த தகவலும் இல்லாததால், சீனா மற்றும் மலேசிய பயணிகளின் குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் நிவாரண தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானத்தில் சென்ற ரோட், மேரி பரோசுக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்ய அவர்களது உறவினர்கள், நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். பிரிஸ்பேன் நகரில் நாளை அவர்களுக்கு இறுதி சடங்கு நடக்கிறது.
No comments:
Post a Comment