காலாவதியான பொருட்களாக மாறியுள்ள அரசியல்வாதிகள் தாமதிக்காது அரசியலில் இருந்து விலக தயாராக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் விருப்பம் என்ற மக்களின் ஆணையிலேயே அரசியல் என்பது தங்கியுள்ளது. சில காலங்களில் அரசியலில் ஈடுபடும் நபருக்கு தடுக்க முடியாத, அதிகளவான மக்களின் ஆதரவு கிடைத்து பாரிய சக்தியாக மாறும். மக்கள் ஆணையும் மக்களின் ஆசியையும் ஒதுக்கி விட்டு அரசியலில் ஈடுபட முடியாது.
அரசியலில் காலாவதியான பொருட்களாக மாறியுள்ள அரசியல்வாதிகள் தாமதமின்றி அரசியல் இருந்து விலக தயாராக வேண்டும். இதன் காரணமாகவே மக்களின் நாடி துடிப்பை அறிந்து அரசியல்வாதிகளான நாம் செயற்பட வேண்டும்.
மக்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளும் போது மக்கள் எம்மை அன்புடன் சூழ்ந்து கொள்வர் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment