Sunday, May 4, 2014

எந்தவொரு முஸ்லிம் ஆயுதக் குழுவுக்கும் இலங்கையில் போர் பயிற்சி வழங்கப்படவில்லை - அரசு



முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.



பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.



இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.



இலங்கை ஓர் மிகச் சிறிய நாடு எனவும், எவரின் கண்களுக்கும் தென்படாது இரகசியமான முறையில் தீவிரவாத பயிற்சிகளை அளிப்பது சாத்தியப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கே இடமில்லாத நிலையில் வேறும் தரப்பினருக்கு எவ்வாறு பயிற்சி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



இராணுவத்தினர் அடிக்கடி காடுகளை சோதனையிட்டு வருவதாகவும் தீவிரவாதிகள் பயிற்சி பெற்றால் அது குறித்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment