Friday, May 2, 2014

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் என்னை கொலை செய்ய முயற்சி - சரத் பொன்சேகா



நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கு தேர்தலுக்கு முன்னர் தன்னை கொலை செய்து தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை, இல்லாமல் செய்யும் நோக்கம் இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



பத்தரமுல்லை பெலவத்தையில் நேற்று நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



என்னுடன் பேசும் சில அமைச்சர்கள், ஆட்சியாளரை தூஷண வார்த்தைகளால் திட்டுகின்றனர். 2015 ஆம் ஆண்டுக்குள் மக்களை அவதிக்குள்ளாக்கும் மோசடியான ஆட்சியை ஒழித்தி கட்டுவோம்.



துப்பாக்கிகளையும் கத்திகளையும் அரிவாள்களையும் காட்டி எம்மை அச்சுறுத்தி அடுத்த தேர்தலில் ஓரங்கட்ட ஆட்சியாளர் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



பிரங்கிகளை தொட்டு பயன்படுத்திய நாங்கள், கைத்துப்பாக்கிகளுக்கு அரிவாள்களுக்கு அஞ்சப் போவதில்லை. பொய், களவு, மோசடியில்லாமல் சுதந்திரமான தேர்தலை நடத்தி எம்முடன் போட்டியிடுமாறு ஆட்சியாளருக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.






No comments:

Post a Comment