Saturday, May 3, 2014

கையொப்பமிடுமாறு எவரும் கோரவில்லை - பிரதியமைச்சர் அப்துல் காதர்





முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த மகஜரில் கையொப் பமிடுமாறு தம்மை எவரும் கோரவில்லையென்று பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் T v க்குத் தெரிவித்தார்.



முஸ்லிம் தலைவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் காதர் எம். பி. கையொப்பமிடவில்லையெனச் சிலர் பிரசாரம் செய்வதாகவும் இஃது உண்மைக்குப் புறம்பானதெனவும் அவர் கூறினார்.



உண்மையில் தம்மிடம் எவரும் கையொப்பம் கோரவில்லையெனவும், அவ்வாறு கோரியிருந்தால், நிச்சயம் கைச்சாத்திட்டிருப்பதாகவும் கூறிய பிரதியமைச்சர் காதர், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதவர்கள் கோரினால் அதற்குத் தாம் உடன்படப் போவதில்லை யெனவும் சுட்டிக்காட்டினார்.




No comments:

Post a Comment