ஈராக் நெருக்கடி நிலைக்கு மத்தியில், ஈராக்கிய கடற்பரப்புக்கு அமெரிக்கா தமது யுத்தக் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
பாரிய எண்ணிக்கையான யுத்த விமானங்களுடன் இந்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் முஸ்லிம் போராளிகள் தாக்குதல்களை நடத்தி இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், ஈராக்கிற்கு இராணுவம் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்திருந்தார்.
இதன்படி இந்த கப்பல் நேற்றையதினம் முதல் வடக்கு அரபிக் கடலில் இருந்து ஈராக் நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஈராக்கின் முஸ்லிம் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயற்பட விருப்பதாக, ஈரான் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment