Saturday, June 28, 2014

இலங்கையிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை புனித நோன்பு ஆரம்பம்





புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று சனிக்கிழமை, 28 ஆம் ஆம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தென்பட்டதையடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளது.



அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இதனை உறுதி செய்துள்ளது.



அரபு, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் நாளை புனித நோன்பு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment