1983ம் ஆண்டு கலவரங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமிச்ஙக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜூலை கலவரத்தை தடுத்து நிறுத்த அப்போதைய அரசாங்கம் உரிய முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமும் அதே பிழையை செய்து விடக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அலுத்கம பேருவளை சம்பவங்கள் கலவரங்களின் மூலம் சிங்கள முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகள் கை மீறிச் செல்வதற்கு முன்னதாக அரசாங்கம் சிங்கள முஸ்லிம் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்
No comments:
Post a Comment