சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாத மற்றும் மதவாத மோதல்கள் அதிகரிக்கும் வகையில், பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்குக்கு வரும் வகையில், அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய முறையில் சட்டத்தை செயற்படுத்துமாறும் அவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மைய காலத்தில் ஏற்பட்ட மத ரீதியான மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், சில சமூக வலைத்தளங்கள் மூலமாக மீண்டும் மோதல்களை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர்.
மதவாத ரீதியான மோதல்களை தடுக்க அரசாங்கம் உட்பட மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகள் முனைப்புகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், சமூக வலைத்தளங்கள் வழியாக மீண்டும் அவ்வாறான மோதல்களை ஏற்படுத்த முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment