ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகருக்குச் செல்லவுள்ளார். இவ்விஜயமானது அண்மையில் நடந்த வன்முறைகளின் பின்னர் குறித்த பகுதி மக்களின் நலன் விசாரிப்பதுடன் இருதரப்பினருக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் அமையவுள்ளது.
மேலும், ரணில் விக்கிரமசிங்க கந்தேவிகாரை மற்றும் அதிகாரிகொட பள்ளிவாசலில் நடைபெறவுள்ள மத அனுட்டானங்களில் கலந்து கொள்வார் எனவும் காலி மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22ஆம் திகதி ஐ.தே.க.வின் குழு குறித்த பகுதியை கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment