காயமடைந்த முஸ்லிம்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் முயற்சியின் போது அவரது வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் மக்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து தெவரப்பெருமவின் மீது குண்டர் கூட்டம் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தெவரப்பெரும பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களை பாதுகாத்து அடைக்கலம் வழங்கியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை மற்றம் அலுத்கம பிரதேசத்தில் காயமடைந்த முஸ்லிம்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெவரப்பெருமவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அவர் தாக்குதலில் சிக்கவில்லை எனவும், வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எந்த இடத்தில் வைத்து தாக்குதல் நடத்தபபட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. bbc
No comments:
Post a Comment