அளும்கமயில் பௌத்த சிங்கள காடையர்களின் வன்முறைக்கு உள்ளான முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம் கவுன்சில் மூலமாக அளுத்கமயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவியளிக்க முடியுமென வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் உதவி வழங்கமுடியுமென ஜப்னா முஸ்லிம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து ஸ்பெயினில் வாழும் சுமார் 40 பேர் அளவிலான இலங்கை முஸ்லிம்கள் தமக்குள் சேகரித்த நிதியை முஸ்லிம் கவுன்சிலுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த நிதி அளுத்கமயில் தனது வர்த்தகத்தை இழந்து தவிக்கும், முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு வழங்கப்படுமெனவும், இதன்மூலம் அவர் தனது வர்த்தகத்தை மீளக்கட்டியெழுப்ப வாய்ப்புக் கிட்டுமெனவும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறு நிதியுதவி வழங்க முன்வந்த குறிப்பிட்ட ஸ்பெயின் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.
No comments:
Post a Comment