பொதுபல சேனா இயக்கம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து தற்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கை வைக்கத் தொடங்கியுள்ளது.
சமூக வலையமைப்புக்களில் இராணுவ் புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் பொதுபல சேனா இயக்கம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் முஸ்லிம் உத்தியோகத்தர்களை, விலக்குமாறு பொதுபலசேனா சமூக வலையமைப்புக்களின் ஊடாக கோரியுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருவதாக பொதுபல சேனாவின் சிரேஸ்ட உறுப்பினர் திலான் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முகநூல் ஊடாக பொதுபல சேனா இயக்கம் இந்தப் பிரச்சாரத்தை தீவிரமாக்கியுள்ளது.
முஸ்லிம் புலனாய்வுப் பிரிவினர் நாட்டை ஜிஹாதிய போரை நோக்கி நகர்த்தி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் பதவிகளை வகித்து வரும் முஸ்லிம்கள் சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பொதுபல சேனா எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை, இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முஸ்லிம் அதிகாரிகள் இறுதிக் கட்ட போரின் போது மிகவும் முக்கியமான பங்காற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேணல் லாபீர் மற்றும் மேஜர் முத்தலீப் போன்றவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்காக மிக முக்கியமான பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment