Thursday, June 26, 2014

கொழும்பு முஸ்லிம்களின் வர்த்தகத்தை குறிவைத்துள்ள பொதுபல சேனா, செயலமர்வும் ஏற்பாடு


கொழும்பில் முஸ்லிம்களின் வர்த்தகத்தைக் குறிவைத்து பொது பல சேனா அமைப்பின் அடுத்த கட்டத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி நாட்டில் இல்லாத சமயத்தில் இன்னொரு இனக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது பல சேனா திட்டமிட்டு வருகின்றது.



இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 29ந் திகதி கொழும்பில் பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



“உங்கள் பிரதேசத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுக்க முன்வாருங்கள்” என்ற தலைப்பில், இந்த செயலமர்வு கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.



இதில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து தேரர்கள் மற்றும் பொதுபல சேனா ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.



சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



மேலும் செயலமர்வின் பின்னர் கொழும்பின் முக்கிய பகுதியொன்றில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவும் பொது பல சேனா அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.



அதன் போது வன்முறைகளைத் தூண்டிவிட்டு இனக்கலவரமொன்றை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tw







No comments:

Post a Comment