Tuesday, September 2, 2014

''ஊவா மாகாண தேர்தல் காய்சல்'' முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய குழு நியமித்த ஜனாதிபதி



ஊவா மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி, சமய, கலாசார, கல்வி, சுகாதார பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழு கடந்தவாரம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சாதாரண பிரஜைகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்துள்ளது.



இதன் போது ஊவா மாகாண சபை ஆட்சியின் கீழ் தனியான முஸ்லிம் கல்விப் பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு முஸ்லிம் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.



பதுளை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு தேவையான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்மொழிந்த அவர்கள், அதனை மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண் டனர்.



அத்துடன் பதுளை அல் அதான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் முஸ்லிம் சமய ஸ்தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, மஹில கஸ்தென்ன முஸ்லிம் மையவாடிக்கு செல்லும் பாதையை அகலமாக்கி திருத்துவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.



மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்துத் தருவதற்கும் காணி இல்லாத குடும்பங்களுக்கு தேவையான காணிகளை பகிர்ந்த ளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜனாதிபதியின் விசேட குழுவினர் இவ்வேண்டுகோள் அடங்கிய விசேட அறிக்கையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்துள்ளனர்.


No comments:

Post a Comment