தெற்காசியவில் ஜிகாத் எனப்படும் இஸ்லாமிய புனித போரை நடத்த தயாராக இருப்பதாக அல் கைடா இயக்கத்தில் தலைவர் அய்மன் அல் சவாஹீர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பதில் கூற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தெற்காசியாவில் பிராந்தியத்தில் புனித போரை நடத்தும் நோக்கில் இந்தியாவில் தங்களில் கிளையை ஆரம்பித்துள்ளதாக அல் கைடா இயக்கத்தில் தலைவர் அய்மன் அல் சவாஹீர் அறிவித்திருந்தார்.
தற்போது உலகம் முழுவதிலும் அல் கைடா மற்றும் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் வியாபித்து வருகின்றனர்.
இது தொடர்பான சிங்கப்பூரில் உள்ள பயங்காவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன எமது dfm பிரிவுக்கு கருத்து வெளியிடும் போது அய்மன் அல் சவாஹீரின் கருத்து புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment