இஸ்ரேலுடனான காசா யுத்தத்திற்கு பின்னர் ஹமாஸ் அமைப்பின் மக்கள் ஆதரவலை அதிகரித்திருப்பதாகவும் பலஸ்தீனத்தில் தேர்தல் வைக்கப்பட்டால் அந்த அமைப்பு வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்பு வாக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கொள்கை மற்றும் ஆய்வுக்கான பலஸ்தீன மையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. பலஸ் தீனத்தில் இருமுனை ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பத்தாஹ்வின் மஹ்மூத் அப்பாஸை விடவும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியான் இரட்டி ப்பான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டுவார் என அந்த கருத்துக் கணிப்பு குறிப்பீடுகிறது.
ஹமாஸின் ஆயுதப் போராட்ட சிந்த னை பலஸ்தீன தேசத்தை வென்றுதர உதவும் என சுமார் அரைப்பங்கு பலஸ் தீனர்கள் நம்புகின்றனர். 20 வீதமான பலஸ்தீனர்களே வன்முறையற்ற போரா ட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இஸ்ரேலுடனான யுத்தத்தில் ஹமாஸ் வெற்றியீட்டியதாக 79 வீதமானவர்கள் நம்புகின்றனர். மூன்று வீதமானவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பதோடு 17 வீதமானவர்கள் இரு தரப்பும் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் வெற்றி பெற்று காசாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றியது தொடக்கம் பலஸ்தீனத்தில் இதுவரை தேசிய மட்ட தேர்தல் ஒன்று இடம்பெறவில்லை. மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள 1000க்கும் அதிகமான பலஸ்தீனர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment