Tuesday, September 2, 2014

மனைவியருடன் தனிமையில் இருக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி - ஷார்ஜா அரசு அறிவிப்பு



உலகின் சில நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று ஷார்ஜாவில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளும் இனி தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



ஷார்ஜாவில் உலகத்தரத்துக்கு ஏற்பவும், சர்வதேச மனித உரிமை சபையின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியும் உருவாக்கப்பட்டு வரும் புதிய மத்திய சிறைச்சாலையின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று அந்நாட்டின் சிறைத்துறை மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்தத் துறையின் இயக்குனரான கர்னல் அரெப் அல் ஷரீப் அறிவித்துள்ளார்.



இந்தச் சிறை வளாகத்தில் உருவாக்கப்பட்டு வரும் தனிப்பகுதியில் ’அல் கில்வா-அல் ஷரீயா’ என்ற வகையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் தங்கள் மனைவியரை இனி சட்டப்பூர்வமான முறையில் தனிமையில் சந்திக்க முடியும்.



இதன் மூலம் நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இருந்து விடுபட்டு, தங்களது குடும்ப உறவுகளை அவர்கள் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்று கர்னல் அரெப் அல் ஷரீப் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment