Tuesday, September 2, 2014

சோமாலியாவின் அல் ஸபாப் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை





சோமாலியாவின் அல் ஸபாப் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த தாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.



திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்து பென்டகன் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது என்று அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



எனினும் அல் ஸபாப் சிரேஷ்ட தலைவர் ஒருவரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.



அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட அல் ஸபாப் ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் மொகடி'{வை ஆபிரிக்க ஒன்றியப் படை 2011 ஆம் ஆண்டு மீட்டது. எனி னும் நாட்டின் மத்திய மற்றும் தெற்கின் பெரும் பகுதிகளை அல் ஸபாப் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.



மொகடி'{வில் இருந்து தெற்காக 240 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ஹாவாய் கிரம மக்கள் பாரிய வெடிப்புச் சத்தங்களை கேட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அத னைத் தொடர்நது கறும்புயை வெளிவருவதைப் பார்த்ததா கவும் அவர்கள் விபரித்துள்ளனர்.



சர்வதேச ஆதரவு பெற்ற சோமாலிய அரசை கவிழ்க்க அல் ஸபாப் போராடி வருகிறது.


No comments:

Post a Comment