Gtn
நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கொள்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இராணுவ சிப்பாய் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தமைக்கு பொதுபலசேன காரணமாக இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பன்னிப்பிட்டிய கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பியசேன என்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தீக்குளித்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தார்.
அதேவேளை தீக்குளிக்கும் எண்ணத்துடன் இந்த இராணுவ சிப்பாய் இருக்கவில்லை என்றும் வேறு நபர்களுடைய வற்புறுத்தலினால் தீக்குளித்திருக்கலாம் எனவும் உறவினர்கள் பொலிஸாரிடம் சந்தேகம் தெரிவித்ததாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
இராணுவச் சிப்பாயின் மரண விசாரணையின்போது உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டனர் என்றும் முழுமையான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீக்குளித்து காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பொதுபலசேன உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பௌத்த சமயத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கன்டி தலதாமாளிகை வளாகத்தில் கடந்த ஆண்டு புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தமைக்கும் பொதுபலசேன காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment