Wednesday, September 3, 2014

முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் இடமாற்றப்படுமா..?



இஸ்லாத்தின் இரண்டாவது புனித தலமான மதீனாவின் மஸ்ஜpத் அல் நபவி பள்ளிவாசலில் உள்ள இறைத்தூதர் முஹமது நபியின் அடக்கஸ்தலத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்று குறித்த செய்தி சர்வதேச ஊடகங்களில் கசிந்து ள்ளது.



சவு+தி அரேபியாவின் முன்னணி அறிஞர் ஒருவரின் ஆலோசனை ஆவணம் ஒன்றிலேயே இது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் பள்ளிவாசல் மேற்பார்வையாளர்கள் மத்தியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் சர்வதேச அளவில் முஸ்லிம்கள் மத்தியில் பிளவு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



புனிதத் தலங்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்களை அழிக்கும் சவு+தி நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்துவரும் சவு+தியின் மற்றுமொரு முன்னணி அறிஞரே இந்த விடயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதில் சர்ச்சைக்குரிய திட்டங்கள் உள்ளடக்கிய, சவு+தி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டிருக் கும் 61 பக்க ஆவணம் தொடர்பான விபரம் 'தி இன்டி பென்டன்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.



இந்த திட்டத்தில் இறைத்தூதர் முஹமது நபியின் அடக்கஸ்தலம் அருகில் இருக்கும் அல் பக்கி அடக்கஸ் தலத்திற்கு மாற்றப்பட்டு தமது தோழர்களின் அடக்கஸ் தலங்களுடன் அடையாளம் இன்றி விடப்படவிருப்பதாக மேற்படி பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சவு+தி நிர்வாகம் இந்த பரிந்துரைக்கு அமைய செயற்படுவதற்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை என்றபோதும் கடந்த காலங்களில் அல் பக்கி அடக்கஸ்தலத்தில் இருக்கும் முஹமது நபியின் தோழர்களது அடக்கஸ்தலங்கள் அகற்றப்பட்டது போன்ற நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



சவு+தி அரசு கடந்த காலங்களில் மஸ்ஜpத் அல் நபவி பள்ளிவாசல் உட்பட இஸ்லாமிய தலங்களில் மாற்றங்கள் பலவற்றை கொண்டுவந்துள்ளது. அல் பக்கி அடக்கஸ்தலத்தில் இருந்த இறைத்தூதரின் தந்தை உட்பட பல உறவினர்களினதும் உடல் எச்சங்கள் 1970களில் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் 1924 ஆம் ஆண்டில் அங்கு அடக்கப்பட்டிருக்கும் இறைத்தூதரின் தோழர்களது அடையாளங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் இஸ்லாமிய மரபுரிமை தொடர்பான ஆய்வு அறக்கட்டளையகத்தின் தலைவரான டொக்டர் அலவி, தி இன்டிபென்டன் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.



உஸ்மானிய பேரரசு காலத்து மதச்சின்னங்களை அழிக்கும் முயற்சியில் சவு+தி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக மேலும் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மஸ்ஜpத் அல் நபவி பள்ளிவாசலின் தனித்துவமான பச்சைநிற குவிவுமாடமும் அகற்றப்படவிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. அதேபோன்று உஸ்மானிய பேரரசு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறைத்தூதரின் அடக்கஸ்லத்தை ஒட்டியிருக்கும் அலங்காரங்களும் அகற்ற முயற்சி மேற் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment