Monday, September 1, 2014

''எனக்கு ஒரு தாய் வேண்டும்''



தாயை தத்தெடுக்க விரும்பும் சீன இளைஞர் அதற்காக ரூ.1 கோடியை வழங்க முன்வந்துள்ளார். சீனாவின் சியாச்சென் பிராந்தியம் குவான்கான் நகரைச் சேர்ந்தவர் பங்க் பார்க். முப்பது வயதாகும் அவர் தற்போது ஒரு தாயை தத்தெடுக்க விரும்புகிறார்.



தனக்கு தாயாக வரக்கூடியவர் 57 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், நன்றாகப் படித்திருக்க வேண்டும், போதைப்பொருள் பழக்கம் இருக்கக்கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் அவர் தனது தாயைத் தேடி வருகிறார்.



இதற்காக குவான்கான் நகரின் மையப் பகுதியில் கையில் அறிவிப்பு பதாகையுடன் அவர் நாள்தோறும் காத்திருக்கிறார். புதிய தாயாருக்கு அன்பளிப்பாக வழங்க சுமார் ரூ.1 கோடியையும் அவர் கையில் வைத்துள்ளார். அந்தப் பணம் போலியாக இருக்கும் என்று கருதி சிலர் சோதனை செய்தபோது அவை அனைத்தும் உண்மையான ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.இந்த விநோத இளைஞருக்கு தாயாக ஏராளமான பெண்கள் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment