Friday, February 21, 2020

இலங்கையின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள நாமல், தஹாம், விமுக்தி தயாராக வேண்டும்


இலங்கையின் எதிர்கால தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்கள் தயாராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாமல் ராஜபக்ச, தஹாம் சிறிசேன மற்றும் விமுக்தி குமாரதுங்க ஆகிய முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்கள் இலங்கையின் எதிர்கால தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.

நாட்டின் எதிர்கால வெற்றிக்காக இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment