Thursday, February 20, 2020

இணைந்து போட்டியிடுவது தொடர்பில், கோட்டா- மைத்திரி கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணிநேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment