( ஐ. ஏ. காதிர் கான் )
நாட்டு முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ரீதியிலான முஸ்லிம் தலைமைத்துவம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சிறந்த ஆளுமையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இந்நாட்டின் அகில இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். உலமாக் கட்சித்தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதினால் இப் பிரகடனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிலோன் சிட்டி ஹோட்டலில், கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன இணைப்பாளர் உவைஸ் ஹாஜியின் தலைமையில் (19) நடைபெற்ற கூட்டத்திலேயே இப்பிரகடன நிகழ்வு இடம் பெற்றது.



No comments:
Post a Comment