Thursday, February 20, 2020

இனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது

19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது.
ஆனாலும்....
18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேசிய ஒருங்கிணைப்பின் மாபெரும் சக்தியான கலாநிதி குணதாச அமரசேகர ஊடக சந்திப்பொன்றில் தீக்குச்சியை உரசிஉள்ளார் என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரியும்.
சாய்ந்தமருதுக்கு சபை கொடுக்கப்பட்டதை MCC உடன்படிக்கை போன்றதென அவர் வர்ணித்துள்ளார்.
மேற்படி இனவாத பேரணியின் மற்றொரு பிரமுகரான சட்டத்தரணி கல்யாணந்த திரணகம வும் மிகவும் கடுமையாக இதனை விமர்சித்துள்ளார்.
பொதுவாக இவ் அரசின் மறைகரமாக இயங்கும் இனவாதிகளின் அழுத்தமே காரணம் என்பது தெளிவாக புலப்படுகிறது.
வருகிற பொதுத் தேர்தலில் அரசுக்கு பேராதரவை பெற்றுத் தரக்கூடியது என பேசப்படும் சாய்ந்தமருதுக்கான சபை வர்த்தமானியையே வாபஸ் பெற வைக்கும் அளவுக்கு இனவாதிகளின் கை ஓங்கி உள்ள இவ் அரசுக்கு, தேர்தலில் வெற்றி பெற்றுக்கொடுத்தால் பின் நிகழ்வுகளை யார் , எவ்வாறு தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதை அல்லாஹ் வெளியாக்கியுள்ளான். 
அல்ஹம்துலில்லாஹ்!
பொஹட்டுவைக்கு 
ஜயவேவா 
போடுவோமே !
பட்டப்பகலில் 
பாதாள மீட்டிங்கில்
பாய்வோமே!!
ஆடுவோமே
பள்ளுப்பாடுவோமே !
ஆனந்த சுதந்திரத்தை 
அழித்துவிட்டோமென்று
ஆடுவோமே
பள்ளுப்பாடுவோமே!!   Rauf Hazeer 

No comments:

Post a Comment