இலங்கையில் உத்தேச அதிவேக வீதி வலைப்பின்னலை நிர்மாணிக்கும் நடைமுறைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்த அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு,
இலங்கையில் உத்தேச அதிவேக வீதி வலைப்பின்னலை நிர்மாணிக்கும் நடைமுறையை முன்னெடுத்தல்
முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் கீழ் குறிப்பிட்ட வகையில் அதிவேக நெடுஞ்சாலை வலைப்பின்னலை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
* மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் - கடவத்தை - மீறிகம, மீறிகம - குருநாகல், பொத்துஹெர - கலகெதர மற்றும் குருநாகல் - தமபுள்ள என்ற ரீதியில் 4 கட்டங்களின் நிர்மாணப்பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துதல்.
* ருவான்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கஹடுவ - இங்கிரிய, இங்கிரிய - இரத்தினபுரி மற்றும் இரத்தினபுரி – பெல்மதுல்ல என்ற ரீதியில் மூன்று பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்துதல்.
* கிழக்கில் அதிவேக வீதி திட்டம் மத்தள விமான நிலையத்தில் இருந்து வெல்லாவய மற்றும் சியம்பலாண்டுவ ஊடாக பொத்துவில் பிரதேசத்தை தொடர்புபடுத்துவதை நடைமுறைப்படுத்துதல். இதற்கமைவாக மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்காகவும், ருவான்புர அதிவேக நெடுஞ்சாலையில் i பிரிவிற்கான ஆலோசனை ஒன்று M/s CNTIC என்ற நிறுவனத்திடம் பெற்றுக்கொள்வதற்காகவும், இந்த திட்டத்தின் 2 பிரிவை நிர்மாணிப்பதற்கான போட்டி தன்மை அடிப்படையிலான கேள்வி மனுக்களை கோருவதற்காகவும், கிழக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கான சாத்தியவள கூற அறிக்கையை மேற்கொள்வதற்கும் நிர்மாணப்பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு வள திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment