Tuesday, March 24, 2020

பெந்தோட்டை, பலப்பிட்டிய பிரிவுகளில் 336 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பெந்தோட்டை, பலப்பிட்டிய ஆகிய 2  பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 336 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரென, இந்துருவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் நிஹால் ரணசூரிய தெரிவித்துள்ளார்.

இதில் 184 பேர் பலப்பிட்டிய பிரதேசத்திலும் 152 பேர் பெந்தோட்டையில் வசிப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்கள் இத்தாலி, பிரான்ஸ், மாலைத்தீவு, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருதைத் தந்தவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment