ஹொரோவொபொத்தானை கிவுலகட பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளிவாயலில் தொழுகை நடத்தியத்தியமை தொடர்பில் பள்ளிவாயலின் தலைவர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த நிர்வாக சபையை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க வக்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த பள்ளி நிருவாக சபையை தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் வவுனியா மாவட்ட கள அதிகாரி அஷ்ரப் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
வக்பு சபையின் நெறிப்படுத்தலில் விரைவில் புதிய நிருவாக சபை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment