ஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப்படையை சார்ந்த ஓர் அரச ஊழியர்.
முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்த தடியை எடுக்கும் பொழுதே நாம் காவல் துறையின் அனுமதிப்பத்திரத்தையும் காட்ட நேரம் சரியாய் இருந்தது.
முஸ்லிம்த?
ஒவ் சேர்...
எங்க போனீங்கே??
தாய்மொழியை கொலை செய்யும்பொழுது ஏதோ என்னுள் கோபம்..
சென்ற இடத்தினையும் செய்த வேலையினையும் சுருக்கமாய் சொல்லி முடித்தோம்..
ஹரி போங்க போங்க என்றார் வஞ்சனை சிரிப்போடு
சிராவட்டம சேர் என்றோம்..
ஆப்போவ்..
முஸ்லிம் கட்டிய மாற பொறு கட்டிய என்றான்..
வந்த கோபத்தை விழுங்கியவனாக
எய் சேர் எஹம கிவ்வே??
அத்தோடு தமிழை கொல்ல ஆரம்பித்தான்..
நீங்கள் எல்லாரும் பொய்யர்கள்,
எப்பொழுது நாம் எவரை நிறுத்தினாலும் பையில் எப்போவோ எடுத்த மருத்துவ துண்டை காட்டுகிறார்கள். கேட்டல் பிள்ளைக்கோ மனைவிக்கோ சுகமில்லை என்கிறார்கள்.
இளைஞ்சர்கள் உயர் ரக மோட்டார் சைக்கிள்களில் வந்து எங்களுக்கு ஊ கட்டிவிட்டு அல்லது தண்ணீர் பேக்குகளை வீசிவிட்டு செல்கின்றார்கள்.
அல்லது குடும்ப உறுப்பினருக்கு சுகமில்லை என சொல்லி விட்டு குடும்பம் குடும்பமாக பாபிகிவ் போட செல்கிறார்கள்.
நான் குறுக்கிட்டு கேட்டேன் உங்களுக்கு எப்படி சேர் தெரியும் அவர்கள் பாபிக்கிவ் போடத்தான் செல்கிறார்கள் என்று?
கீழே விழுந்த சாகோல் பக்கட்டை நான் தான் எடுத்து கொடுத்தேன் என்றார்..😂
நாங்கள் யாரையேனும் கைது செய்து சென்றால்
உங்களை வெளியில் எடுக்க தொர மார் இருக்கின்றார்களே😏😏
நீங்கள் சட்டத்தையும் மதிப்பதில்லை., வந்திருக்கின்ற நோயையும் பொருட்படுத்துவதில்லை.
உங்கள் ஊரில் கடமையாற்றுவதை நினைத்தால் எமக்கு எரிச்சலாக உள்ளது என்று சொல்லி முடித்தார்.
அவர்கள் சார்பாக நாம் மன்னிப்பு கேட்டு விட்டு விடைபெறும் பொழுது கூறினார் எங்களுக்கு செய்கின்ற வேலைக்கு படுவிங்க பாடு என்று கூறிக்கொண்டே அடுத்த பைக்குக்கு கை காட்டினார்.
வெட்கத்தை வெளிக்காட்டாமல் அங்கிருந்து நகர்ந்தோம்..
""அநீதி இழைக்கப்பட்ட தரப்பினரின் பதுவாவிற்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையும் இல்லை""
அது காபிராக இருந்தாலும் சரியே.
உணர்ச்சியற்ற சமூகம் மாற்றத்தை எப்பொழுதுமே விரும்பாது.😏(நான் உட்பட)
அவர் பேசிய அரைகுறை தமிழை தவிர்த்து
தூய தமிழில் தரவினை பதிந்துள்ளேன்.
RJ Ahmed

No comments:
Post a Comment