Monday, April 13, 2020

அரசாங்கத்திற்கு ரணில் வழங்கவுள்ள திட்டம்


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாரிய சவால்களிலிருந்து மீள்வதற்கான பொருளாதார திட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்துள்ளார்.

இதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவும் எதிர்பார்த்துள்ளதுடன் அதற்கு முன்னர் குறித்த  திட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்க உள்ளார்.

கொவிட்19 வைரஸ் தொற்றுக் காரணமாக தேசிய பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை சீர் செய்யும் வகையிலான யோசனை திட்டமொன்றே தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா ஒழிப்பிற்கான நிதி பயன்பாடு மற்றும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முறைமை குறித்தும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது .

எனவே கொவிட்19 வைரஸ் ஒழிப்பு திட்டத்தை வெற்றிக்கரமாக முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெற செய்ய அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமென்று தெரிவித்துள்ளார்.

(எம்.மனோசித்ரா)

No comments:

Post a Comment