Monday, April 13, 2020

புத்தளம் இளைஞர்களின், மகத்தான சேவை

புத்தளம் மாவட்டத்தில் பசியால் வாடும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் பறவைகளுக்கு இளைஞர்களால் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.


புத்தளம் குருநாகல் வீதி கல்லடி அரளிய உயன கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அவற்றுக்கு உணவுகளை வழங்கினர். 

தொடரான ஊரடங்கு சட்டத்தினால், பொது மக்களின் நடமாட்டம் இன்மையால் வீதிகளில் அலைந்து திரிகின்ற கட்டாக்காலி நாய்கள் மற்றும் காகங்கள் உண்ண உணவின்றி உள்ளன.

இவைகளுடைய பசியை தீர்த்து வைப்பதற்காகவே குறித்த இளைஞர்களினால் இந்த உணவுகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, யாசகம் கேட்டு சீவிக்கும் யாசகர்களுக்கும் பிரத்தியேகமாக இவர்களால் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எம்.யூ.எம்.சனூன்

No comments:

Post a Comment