Monday, August 17, 2020

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிப்பு - 2 மணி நேரத்திற்குள் சீர் செய்யப்படும் என்கிறார் அமைச்சர்


கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. 

2 மணி நேரத்திற்குள் மின்சார துண்டிப்பு சீர் செய்யப்படலாம் என மின்வலு அமைச்சர் டலள் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. 

மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment