Saturday, August 15, 2020

அமைச்சர்கள் தமது துறைகளில், முன்னேற்றத்தை காட்ட 6 மாதங்கள் அவகாசம்


அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் ஆறு மாதங்களுக்கு பின்னர், அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாதங்களுக்குள் அமைச்சர்கள் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழங்கியுள்ள பங்களிப்பு, வழங்கிய இலக்கை பூர்த்தி செய்துள்ளமை, அமைச்சுக்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இதன் போது அமைச்சர்கள் எவராவது அரசாங்கம் மற்றும் அமைச்சுக்களின் இலக்கை அடைய தவறினால், அவர்களை உடனடியாக அமைச்சு பொறுப்பில் இருந்து நீக்குவது எனவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment