Friday, August 14, 2020

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த பாதி வாக்குகள், சிறுபான்மை இன மக்களின் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை தனக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக உறுதியாக கூறியதாகவும் எனினும் அந்த பதவி தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள். இதனால், தேசிய பட்டியலில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.

சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட நண்பர் என்ற காரணத்திற்காகவே இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதே தவிர அவர் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அல்ல எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment