Tuesday, August 18, 2020

முஸ்லிம் மக்கள் மீது குத்தப்பட்டுள்ள சஹ்ரான் முத்திரையை, அப்புறப்படுத்த வேண்டியது நீதியமைச்சரின் கடமை


பொது மக்களிடையே காணப்பட்ட பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையின் நீதியமைச்சர் பதவியை மொஹமட் அலி சப்றிக்கு வழங்கியிருப்பதாக கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

மொஹமட் அலி சப்றி நீதியமைச்சில் நேற்று கடமைகளை பொறுபேற்கும் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரே பாடசாலை கட்டமைப்பு, ஒரே சட்டம் உருவாக்கப்படுமாயின் எதிர்காலத்தில் சஹ்ரான்கள் உருவாகாமல் இருப்பதற்கு சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

முஸ்லிம் மக்கள் மீது குத்தப்பட்டுள்ள சஹ்ரான் முத்திரையை அப்புறப்படுத்த வேண்டியது நீதியமைச்சரின் கடமை எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment