Saturday, August 15, 2020

எனக்கு முழு அமைச்சுத்தான் வேண்டும், ராஜாங்க அமைச்சு தேவையில்லை - விஜயதாச பிடிவாதம்

ஒரு போதும் தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை தவிர ராஜாங்க அமைச்சு பதவியை வகித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்ட பின்னர், அவர், ஜனாதிபதியின் ஆலோசகரை தொடர்புகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

ராஜாங்க அமைச்சர்களுக்கான எந்த நிறுவனங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பகிரப்படவில்லை எனவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தனக்கு பொய்யான அமைச்சு பதவிகள் தேவையில்லை எனவும் அப்படியான அமைச்சு பதவிகளை தான் பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment