இன்று -29- காலை எனது பிரத்தியேக வைத்திய நிலையத்துக்கு 70 கள் வயதுடைய ஒரு மூதாட்டி அழைத்து வரப்பட்டார்.
அவர் ஏற்கனவே சீனி, ப்ரஷர், இருதய நோய் ஆகியவற்றுக்கு அரச வைத்தியசாலை ஒன்றில் தொடர்ச்சியாக சிகிச்சை பெறுபவர். ஆனால் ஊரின் நிலைமை காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக வைத்தியசாலைக்குச் செல்லவுமில்லை, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவுமில்லை.
தலைச்சுற்று, இலேசான மயக்க நிலை என்பன மாத்திரமே அவரது முறையிடல்.
அவரது குருதியின் உபவாச வெல்ல மட்டம் 300 ஐத் தாண்டி இருந்தது. குருதி அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைமையில் அவர் இருந்தார்.
இதனை அவரிடம் சொன்ன போது...
எனக்கோ இன்றைக்கோ நாளைக்கோ போகிற வயது, நாட்டு நடப்பு சரியில்லை, ஆசுபத்திரிக்குப் போனால் வார்ட்டில் வைப்பார்கள். இறைவன்னின் நாட்டம் சீவன் போயிற்றெண்டா PCR செய்து போட்டு மையத்தை பத்த வச்சிப் போட்டுருவாங்க. இந்த ஆலிசம் ஒண்டும் வேணாம். உங்களுக்கு ஏலுமெண்டா பாருங்கோ, குளிசை மருந்தை தாருங்கோ, இல்லண்டா நான் வீட்டயே இருந்து மௌத்தாகிறன். இருக்கிற ஆக்கள் அடக்கிப்போட்டு வேலையப் பார்க்கட்டும்.
... என்று சொல்லிக் கொண்டு எழுந்துவிட்டார்.

No comments:
Post a Comment