Sunday, February 7, 2021

1,380 கிலோ சமையல் மஞ்சள் தீயிட்டு அழிப்பு - 50 இலட்சம் பெறுமதியானது


கற்பிட்டி அம்மாதோட்டம் கடற்கரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான மஞ்சள் கற்பிட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

குறித்த மஞ்சள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக இந்நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சுமார் 1,380 கிலோவும் 500 கிராமும் எடையுடைய சமையல் மஞ்சளே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமாகும் என்பதோடு தற்பொதைய சந்தைப் பெறுமதி 96 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(ரஸீன் ரஸ்மின்)


No comments:

Post a Comment