இன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
கொவிட் மரணத்தை அடக்குவதற்கு பிரதமர் இன்று அனுமதியளித்துள்ளார். இந்த அனுமதி வழங்கியதன் பின்னனியில் இருப்பது யார்? யாரை திருப்பதிப்படுத்துவதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது?காலம் தாழ்த்தியோனும் இதை செய்துள்ளது சரி. அரசியல் காரணங்களுக்காகவே அதிகாரத்தை தக்க வைக்கவே இதை இவ்வளவு நாளும் பிற்ப்படுத்தினார்கள். இந்த அரசாங்கத்திற்கு இரட்டை முகம்.
கிழக்கு முனைய விடயத்தில் பல நாடகங்களை அவர்களே அறங்கேற்றினார்கள்.இறுதியில் என்ன நடந்தது? மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்துள்ளனர். இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பிக்குகள்,புலமையாளர்கள்,
அமைப்புகள் என்று சகலரும் அதிருப்தியில் உள்ளனர்.
விமல் வீரவங்சவிற்குள்ள பிரச்சிணை என்ன ? உன்மையில் நாட்டுப்பற்று இருந்தால்,உன்மையில் அரசாங்கத்துடன் பிரச்சிணை இருந்தால் ஏன் அமைச்சரவையில் இருக்கிறீர்கள்? இராஜினமா செய்து வெளியோறுங்கள் நாங்களும் மக்களும் நம்புகிறோம்.
“கம சமக பிரிசந்தர” நிகழ்ச்சியில் பாரிய நிதி செலவளிக்கின்றனர்.பெரிய நாடகம் இது.ஒத்திகை பார்க்கப்பட்டு நிகழ்சிகளை நடத்துகின்றனர். எழுதி வைத்து பேசுகின்றனர்.இவ்வாறு மக்கள் பிரச்சிணைகளைத் தீர்க்க முடியுமா?
ஆதி வாசி மக்கள் வாழும் காட்டுப்பகுதியை அழிக்கின்றனர்.வாழ்விட இடங்களை முறையற்ற விதத்தில் அழிக்கின்றனர்.தேவையுடைய மக்களுக்கு தேவையுடையதை வழங்குவதையிட்டும் சுற்றாடல் பிரச்சிணைகளை ஏற்படுத்திய வன்னமுள்ளனர் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment