Sunday, February 7, 2021

பொத்துவில் - பொலிகண்டி பேரணி தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல - ஹக்கீம்


நாட்டில் அராஜகமொன்று இடம்பெறுமாயின், அந்த அராஜகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்கும் உரிமை பேரின சமூகத்துக்கும் உண்டெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, நாட்டில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்றார்.

“நாட்டின் சட்ட ஆட்சி, நீதித்துறையின் சுயாதீனம், உள்ளிட்ட ஜனநாயகத்துக்கு எதிரான சகல விவகாரங்களில்  நாட்டமுள்ள சகல தரப்பும் குறிப்பாக பேரின சமூகத்துக்கும் பங்குண்டு” என்றார்.

கொழும்பில் காலமான, கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கல்முனை பிராந்தியத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.யூ. தாஹா செய்னுதீனுக்குறிய

ஜனாஸா தொழுகை, இன்று (7 ) மதியம் 01 மணியளவில் இடம்பெற்றது.

அதில், கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, வெறுமென தமிழ் பேசும் சமூகத்தின் போராட்டம்  மாத்திரம் அல்ல இந்த நாட்டில் உள்ள சகல இனங்களும்  சேர்ந்து நாட்டில் நேர்மையான நியாயமான ஆட்சி நடை பெற வேண்டும் அராஜகம் நீங்க வேண்டும்  ,சட்டத்தின் ஆட்சி சரியாக இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டம்” என்றார்.

எம்.என்.எம்.அப்ராஸ்


No comments:

Post a Comment