Friday, March 11, 2022

எரிபொருட்களின் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் உயர்த்தியது (முழு விபரம்)


சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது (சிபெற்கோ) 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை 254 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பழைய விலையான 177 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரிப்பு ஆகும்.

இந்நிலையில், 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையானது 208 ரூபாயிலிருந்து 75 ரூபாயால் அதிகரித்து 283 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இதேவேளை, முன்னர் 121 ரூபாயாக இருந்த டீசலின் விலையானது 55 ரூபாயால் தற்போது அதிகரித்து 176 ரூபாயாகக் காணப்படுகின்றது. சுப்பர் டீசலின் விலையானது, 159 ரூபாயிலிருந்து 95 ரூபாயால் அதிகரித்து 254 ரூபாயாகக் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment