Tuesday, March 8, 2022

கோடரியால் தாக்கி மாணவி படுகொலை - பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள சடலம்


பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்று பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment