Saturday, April 16, 2022

அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்


நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

அந்தக் கணக்காய்வு தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் மீளவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

No comments:

Post a Comment