இலங்கையில் நாடாளவியரீதியில் பொருளாதார நெருக்கடி குறித்த ஆர்;ப்பாட்டங்கள் தொடர்கின்ற அதேவேளை இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் குரல்களை எழுப்பும் மக்களிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.
ஏஎன்ஐ உடனான உரையாடலில் நாட்டின் தற்போதைய நிலையை துரதிஸ்டவசமானது என வர்ணித்துள்ள அவர் கடந்த சில மாதங்களாக மக்கள் இந்த நிலையை அனுபவிக்கின்றனர் தற்போது இது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் இப்படி வாழமுடியாது இதன் காரணமாகவே மக்கள் வீதிக்கு வரத்தொடங்கினார்கள் எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு காணப்படுகின்றது சிலவேளைகளில் 10- 12 மணித்தியாலங்களிற்கு மின்சாரம்இல்லாத நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த நாட்டு மக்களை பொறுத்தவரை இது மிகவும்; துன்பமான நெருக்கடியான நிலை அதன் காரணமாகவே அவர்கள் வீதிகளிற்கு வரத்தொடங்கினார்கள் என சனத்ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையை அவதானமாக கையாளாவிட்டால் பேரழிவு ஏற்படலாம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் மக்களே எங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்போது அது அதிக வலியை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுங்கள் என நான் தெரிவிக்க விரும்புகின்றேன்,வன்முறைவேண்டாம்,என தெரிவித்துள்ள சனத் இது தங்கள் துன்பங்களை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்கான உண்மையான மக்களின் போராட்டம் எனவும் அவர் ஏஎன்ஐயிக்கு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பதிலளித்துள்ள அவர் இந்த விடயங்கள் இடம்பெறுவதை பார்ப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை, வாகனங்கள் 3 – 4கிலோமீற்றர் தூரத்திற்கு டீசலிற்காக காத்திருக்கின்றன- எரிவாயு பால்மா அனைத்திற்கும் நீண்டவரிசை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இது மிகவும் துயரமான விடயம் மக்கள் காயப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மக்கள் தங்கள் உரிமைகளிற்காக வீதிகளிற்கு வந்துள்ளனர் இதன் காரணமாகவே உரிய விதத்தில் தீர்வு காணப்படாவிட்டால் பேரழிவு ஏற்படும் என நான் தெரிவித்தேன் எனவும் சனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment