Monday, April 18, 2022

நஸீர் அஹமட் ஓர் அவமானச் சின்னம், நடவடிக்கை எடுப்போம் என்கிறார் ஹக்கீம்


முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்  , கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட  உறுப்பினர்கள் நால்வரையும் கட்சியில் அவர்கள்  வகித்த பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது. கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை (22) உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.


ஊடகப் பிரிவு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

No comments:

Post a Comment