Sunday, December 25, 2022

அமெரிக்காவிலிருந்து வந்த 2 கோடி பெறுமதியான “குஷ்”


அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைதான நபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என குறிப்பிட்டனர்.


குறித்த பொதியில் குஷ் ரக போதைப்பொருள் 1.367 கிலோகிராம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments:

Post a Comment