Monday, December 12, 2022

இலங்கையில் சிங்கள முறைப்படி திருமணம் செய்த பிரித்தானிய ஜோடி


பிரித்தானிய தம்பதியர் களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும் 53 வயதான நிக்கி ஜேன் என்பவருக்கும் இந்த திருமணம் நடந்தது.


கண்டிய நடனக் கலைஞர்களுடன் கந்த விகாரையின் குமாரி ஹஸ்தியா முன்றலில் உள்ள ஹோட்டலுக்கு தம்பதியினர் வந்தனர்.

சிங்கள சம்பிரதாயப்படி, ஜெயமங்கல பாடிக்கொண்டே தெப்பச் சடங்குகளை செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.


களுத்துறை கட்டுகுருந்த கடற்கரைக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுகளில் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


கொரோனா தொற்றின் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் வெளிநாட்டு திருமணம் இதுவென கூறப்படுகிறது. TL

No comments:

Post a Comment