Tuesday, December 13, 2022

இலங்கை வரும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு


தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய குடிமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மருந்து, உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தினசரி மின்வெட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு விஜயம் செய்யும் பட்சத்தில் பொருத்தமான பயணக் காப்புறுதியைப் பெற்று, அது போதிய பாதுகாப்பை வழங்குகிறதா என்பதைச் சோதிப்பது முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய மக்கள் போராட்டங்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளை பயன்படுத்தும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பயண ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment