Wednesday, December 14, 2022

அரசாங்கம் தற்போது எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனமானது


65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது  என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  


தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் தற்போது எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனமானது.


அனைத்துக் கட்சி  கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 


இதேவேளை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பாக, அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்திற்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டதாக  உதய கம்மன்பில குறிப்பிட்டார்.


65 வருடங்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும்  எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment